பொறி முதலிய நாடகங்கள்

0 reviews  

Author: சமயவேல்

Category: நாடகங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பொறி முதலிய நாடகங்கள்

அன்னா ஸ்விர் கவிதைகள், குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள், இலையுதிர்கால மலர்கள் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை – நவ சீனக் கவிதைகள் ஆகிய கவிதை மொழிபெயர்ப்புகளையும் மரக்கறி – சர்வதேச மேன் புக்கர் விருதுபெற்ற நாவலையும் மொழிபெயர்த்திருக்கும் திரு. சமயவேல் மொழிபெயர்த்திருக்கும் நாடகங்கள் அடங்கிய தொகுப்புதான் ‘பொறி முதலிய நாடகங்கள்’. ததேயூஸ் ரூஸேவிச் உலக அளவில் மிக முக்கியமான போலந்துக் கவிகளில் ஒருவர். போலந்து தியேட்டரிலும் ஈடுபட்டு பதினைந்து முழு நீள நாடகங்கள் எழுதியிருக்கிறார். இவரது முதல் நாடகமான ‘அட்டவணை அட்டை’ THE CARD INDEX காஃப்காவின் வாழ்வைத் தொட்டுச் செல்லும் ‘பொறி’ THE TRAP ஆகிய இரண்டு நாடகங்கள் இந்த நூலில் இடம்பெறுகின்றன. அட்டவணை அட்டை – போலந்து நாடகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. திரவ வடிவம்கொண்ட புதியவகை யதார்த்தை உருவாக்குகிறது. உறுதியற்ற தன்மையும் முடிவில்லாத நெகிழ்ச்சியும் கொண்ட உலகில், இளைஞர்களின் நெருக்கடிகள் விதம்விதமாகப் பேசப்படுகிறது. பொறி – நாடகம் காஃப்காவின் அகவுலகை மிகுந்த துயரத்துடன் சித்தரிக்கிறது. அவரது காலகட்டத்தின் நெருக்கடியை துல்லியமான சித்திரங்களாகப் பார்க்கிறோம். காஃப்காவைப் புரிந்துகொள்ள இந்த ஒரு நாடகமே போதும்..

பொறி முதலிய நாடகங்கள் - Product Reviews


No reviews available