பணச்சடங்கு
பணச்சடங்கு
ஆசி கந்தராஜாவின் புனைவுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கறுத்தக் கொழும்பான்’ புத்தகத்துக்கு முன்னுரைத்த ஜெயமோகன் ‘அ. முத்துலிங்கத்தின் உலகைச் சேர்ந்த இன்னுமொரு எழுத்தாளர் ஆசி கந்தராஜா’ என்கிறார். முத்துலிங்கத்தின் மொழி நடையை ஆசி கந்தராஜா நினைவுபடுத்துவது சொற்றொடரமைப்பினால் அல்ல புன்னகையின் வெளிச்சத்தால்தான்' என்கிறார். இதையே பாரதி ‘ஒரு தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம்' என்றார் போலும். அவரது புத்தகங்களில் மூன்றாவதாக நான் வாசித்தது ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’. இதுவும் புனைவுக் கட்டுரை எனும் வகைமையின் கீழ் வருபவை.
ஒரு கோணத்தில் நின்று பார்க்கும்போது ஆசி கந்தராஜாவுக்கு முன்னுரைத்தவர் எவரும் சாமானியமானவர் அல்ல. எஸ்.பொ, அ. முத்துலிங்கம், ஜெயமோகன் ஆகியோர், அந்த வரிசையில் இன்று ‘பணச் சடங்கு’ எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். சற்று கர்வமாகவும் இருக்கிறது.
நாஞ்சில் நாடன்
பணச்சடங்கு - Product Reviews
No reviews available

