ஓப்பன் சோர்ஸ்

ஓப்பன் சோர்ஸ்
சாமானியர்களைப் பொருத்தவரை ஆ சேட்டிங் சிஸ்டம் என்றால் அது லிண்டோஸ் மட்டுமே கைப்பட்ட விலை கொண்ட விண் டோஸை, பிற சாஃப்ட்வேரை, AurA செய்து 'முறையான லைசென்ஸ்' இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் தபர்களால்கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். 'லைசென்ஸ்' காலாவதி யானால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்.
இந்தக் கெடுபிடிகளுக்கெல்லாம் மாற்றாக அமைந்த வரப்பிரசாதம்தான் ஓப்பன் சோர்ஸ், ஆபரேட்டிங் சிஸ்டம் ஆபிஸ் பேக்கேஜ், அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஓப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன. முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது, கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னை வராது என்பது கூடுதல் சிறப்பு.
ஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம், ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘உபுண்டு'வை சும்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித் தருகிறது.