நண்டு மரம்

0 reviews  

Author: இரா. முருகன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நண்டு மரம்

இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரியது. சிறந்த வாசகனைக் கோரி நிற்பது.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. சில கதைகள் ஓர் எழுத்தாளன் சோதனை செய்து பார்க்கும் வகையைச் சார்ந்தவை. இவையே சிறுகதைகளின் எல்லைகளை விரிவாக்கும் வல்லமை கொண்டவையாகவும் இருக்கின்றன.

மாய யதார்த்தம் என்பதை தமிழில் வெற்றிகரமாகக் கையாண்ட சொற்ப எழுத்தாளர்களில் இரா.முருகன் முக்கியமானவர். கோட்பாடுகளுக்கு இடையே கலை சிக்கிவிடக்கூடாது என்ற தெளிவை இவரது படைப்புகளில் காணலாம். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அதற்கு மேலும் ஒரு நிரூபணம்.

*

இரா. முருகன், 1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். இவருடைய முதல் கவிதை 1977ஆம் ஆண்டும், முதல் சிறுகதை 1984ஆம் ஆண்டும் கணையாழியில் வெளிவந்தன. நூறுக்கும் மேற்பட்ட சிறுகதை-கள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

நண்டு மரம் - Product Reviews


No reviews available