FD lee-kuan-yew-perunthalaivan-sixth-sense-26710.jpg

லீ குவான் இயூ - பெருந்தலைவன் (Sixth Sense)

0 reviews  

Author: பி எஸ் ராஜகோபாலன்

Category: வாழ்க்கை வரலாறு

Stock Available - Shipped in 1-2 business days

Price:  244.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

லீ குவான் இயூ - பெருந்தலைவன் (Sixth Sense)

குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில், அங்கிருந்த பேராசிரியர்கள் இளபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டுத்திடல், பேருந்து உணவுவிடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கண்டு லீ கொதிந்தார். என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும், நாகரீகமும், பண்பாடும் அவரை ஈர்த்தானும் பிரிட்டிஷ் இன வெறியர்கள் நடந்துகொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது. பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவும் பாகிஸ்தானும் சதந்தர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும், வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையையூட்டியது சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியிலிருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர்ரசிக்கவில்லை. அதற்காக கம்யூனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை. மாற்று அரசியலை முன்வைக்க முடிவுசெய்து மக்கள் செயல் சுட்சியை (Peoples Actions Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாக மாற்றியமைத்தார். சிங்க

ப்பூர் உலக வர்த்தகத்தின் மையப் புள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக்கொண்டிருக்கிறது.

தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லி குவான் யூ அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கைத் தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிச எதிர்ப்பின் பின்னணி, தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.

லீ குவான் இயூ - பெருந்தலைவன் (Sixth Sense) - Product Reviews


No reviews available