குர்திஸ்தான்
குர்திஸ்தான்
குர்திஸ் மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றபோதிலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் வல்லரசுகளுக்கிடையே அவ்வப்போது உருவாகும் பூகோள அரசியல் முரண்பாடுகளின் தாக்கத்தால், குர்திஸ் மக்களின் போராட்டம் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படும் நிலையையே எதிர்கொண்டு வருகிறது. அதேவேளை, மத்திய கிழக்கின் அரசியல் நகர்வுகளில் குர்திஸ் மக்களின் களம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வருகிறது.
அடிப்படையில், பல்வேறு சந்தர்ப்பங்களில் குர்திஸ் சமூகத்திற்குள்ளேயே நிலவிய நில உரிமையாளர்களின் துரோகங்கள், மிதவாதத் தலைவர்களின் அசமந்தப் போக்கு, பதவி மோகத்தால் உந்தப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை, இந்த இன மக்களைத் தலைமுறை தலைமுறையாக வேதனையிலும் அரசியல் நெருக்கடியிலும் வைத்திருக்கின்றன. இதன் விளைவாகவே, குர்திஸ் மக்களுக்கென இதுவரை ஒரு சுதந்திர தேசம் உருவாகவில்லை என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
குர்திஸ்தான் - Product Reviews
No reviews available

