கில்லட்டின் நினைவுகள்

0 reviews  

Author: ஆல்பர்ட் காம்யு ; தமிழில் : த.ராஜாஜி

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கில்லட்டின் நினைவுகள்

ஆ ல்பர்ட் காம்யூ எழுதிய கில்லட்டின் நினைவுகள்
ஒரு சமூகம் பண்பட்டதாக எழுவதற்கு மரண தண்டனை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. வரலாறு, தொன்மம், மதம், கலாச்சாரம், உளப்பகுப்பாய்வு, அறிவியல், சமூக மாற்றங்கள், அன்றாடப் பத்திரிகைச் செய்திகள் வழியே மரண தண்டனை பற்றிய புதிய அறிதல்களை வழங்குகிறது. இந்நூல் எழுதப்பட்ட 1957 காலகட்டத்தில் எந்தவொரு நாட்டிலும் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை. இன்று 145 நாடுகள் சட்ட ரீதியிலோ, நடைமுறை ரீதியிலோ மரண தண்டனையை ஒழித்துவிட்டன. குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே மரண தண்டனையை இன்று நிறைவேற்றுகின்ற சூழலிலும் 2025 இல் 44 வருடங்களில் இல்லாத அளவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக deathpenalty.org இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதை குறிப்பிட்ட சில நாடுகளின் பிரச்சினை என்று கடந்து போக முடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரித்துள்ள வேளையில் இந்த தண்டனையால் குறிப்பிட்ட சதவீதத்தில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலகமய காலகட்டத்தில் ஒரு நாட்டில் தொடரும் அநீதியான சட்டம் எல்லா நாட்டின் மக்களையும் பாதிக்கின்ற வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்நூலின் பொருத்தப்பாடு சிறிய நாடாக இருந்தாலும் அங்கும் கூட மரண தண்டனை ஒழியும் வரை நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

கில்லட்டின் நினைவுகள் - Product Reviews


No reviews available