காப்புரிமைத் தகவல்கள்
காப்புரிமைத் தகவல்கள்
காப்புரிமைத் தகவல்கள் என்பவை சாதாரணத் தகவல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காப்புரிமை என்பது படைப்பாளிக்கான சட்டபூர்வ உரிமையை உறுதி செய்யும் ஆவணம் என்றால், காப்புரிமைத் தகவல்கள் என்பவை அறிவுசார் தளத்தில் புதிய படைப்புகளை உருவாக்கத் துடிக்கும் படைப்பாளிகளுக்கான ‘உந்துசக்தி’ என்று கூறுவது மிகையாகாது.
ஒரு கண்டுபிடிப்பாளர் தனது படைப்பை விவரிப்பதற்காக எழுதும் உரை, அதனை வாசிக்கும் எவரும் அந்தக் கண்டுபிடிப்பை செய்து பார்த்தால், கண்டுபிடிப்பாளருக்கு கிடைத்த அதே முடிவு அனைவருக்கும் துல்லியமாகக் கிடைக்க வேண்டும். எனவே, ஒரு கண்டுபிடிப்பின் தொழில்நுட்ப விவரங்கள் எவ்விதக் குழப்பமும் இன்றி, மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்க வேண்டியது அவசியம். ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகளை விடவும், அதே கண்டுபிடிப்பு தொடர்பான காப்புரிமை ஆவணங்களில் மிகவும் ஆழமான மற்றும் விரிவான தொழில்நுட்பத் தரவுகள் நிறைந்திருக்கும்.
இத்தகைய தனித்துவங்கள் நிறைந்த காப்புரிமைத் தகவல்களின் வகைகள், அவற்றின் ஆவணக் கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து இந்நூல் விரிவாக விளக்குகிறது. காப்புரிமைத் தகவல்களை எங்கு தேடுவது, எப்படித் தேடுவது, எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு வழிகாட்டும் ஒரு சிறந்த கையேட்டைத் தமிழ் வாசகர்களுக்கு இரா.த.சதீஷ் குமார் வழங்கியுள்ளார்.
காப்புரிமைத் தகவல்கள் - Product Reviews
No reviews available

