இசைபட வாழ்தல்(சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்)
Author: சஞ்சய் சுப்ரமணியன் ,கிருபா ஜி ;மொழிபெயர்ப்பாளர்: ப. சகதேவன்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
இசைபட வாழ்தல்(சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்)
எனது இசையுடன் நான் கொண்டுள்ள உறவு மிகவும் அந்தரங்க மானது. நான் பாடும் பாடல்களின் உட்பொருள் அனைத்தும் இந்து சமய மரபைச் சேர்ந்தவை என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. என்னுடைய அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவற்றோடு நான் உறவு கொள்கிறேன். ஒவ்வொரு பாட்டுக்கும், அது தியாகராஜருடையதாக இருந்தாலும் தீட்சிதருடையதாக இருந்தாலும், எனது வாழ்க்கையில் அதற்கான முக்கியத்துவம் உண்டு. இவற்றைப் பொதுவெளியில் பாடும்போது அவற்றைப் பாடுகிறேன் என்பதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் எனக்கில்லை. கேட்பவர்களிடம் அவை உணர்வலைகளை ஏற்படுத்தலாம்; ஏற்படுத்தாமலும் போகலாம். ஆனால் நான் பாடுவதன் மூலமாகவே சமயம் சார்ந்தோ, ஆன்மிகம் சார்ந்தோ குருபீடத்தில் அமர்ந்து கொள்வதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் சமயம் என்பது மிகுதியும் சமூக-அரசியல் அனுபவம் மட்டுமே. அதன் விளிம்புகளில் நின்றுகொண்டிருப்பதாகவே என்னால் உணர முடிகிறது. சமுதாயத்தோடு எனக்குள்ள முதன்மையான தொடர்பு எனது இசையின் மூலமாகத்தான்.
இசைபட வாழ்தல்(சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்) - Product Reviews
No reviews available

