இரவுக் காட்சி

0 reviews  

Author: கே.என்.செந்தில்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இரவுக் காட்சி

கே.என்.செந்தில் அவர்கள் எழுதியது.

வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப்  பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் கடந்த காலத்து்னான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது.கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்துத் இழிவுகளிலிருந்தும் விடுபட மிக இயல்பாக அவருக்கு முடிந்திருக்கிறது. வாழ்வின் மையங்களிலிருந்து விலகி நின்று அவற்றை விமர்சனங்களுக்குள்ளாக்குவதை ,விளிம்பு, மையம் எனக் கட்டமைக்கபட்ட எதிர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளாதல் கலையாக்க முற்பாடும் செந்தில் புத்தாயிரமாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம்.எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து செந்தில் கொண்டிருக்கும் தெளிவு அவரது எழுத்துகளுக்குள்ள கூடுதல் பலம்.தன் கதைமாந்தர்கள் கொண்டுள்ள பதற்றத்தை வாசகர்கள்  மேல் சுமத்த அவர் ஒருபோதும் முற்படுவதில்லை.அவரது கதைகளில் கலைஅமைதி கூடியிருப்பதற்கு இது முக்கியக் காரணம்.

இரவுக் காட்சி - Product Reviews


No reviews available