இரையாகும் இறையாண்மை
இரையாகும் இறையாண்மை
அயலுறவுக் கொள்கைகள் பற்றி, அதிலும் குறிப்பாக இராணுவ உறவுகள் பற்றித் தமிழில் நேரடியாக எழுதப்படும் நூல்கள் அரிது. அந்த வகையில் இந்திய-அமெரிக்க இராணுவ உறவுகள் பற்றித் தமிழில் வெளிவரும் முன்னோடி நூல் இது.
இந்நூலை வாசிக்கும் ஒருவரால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இராணுவ உறவு என்பது தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது; பிறகு எவ்வாறு பரிணமித்துவந்துள்ளது; இரு நாடுகளின் இந்த இராணுவ உறவில் யார் தொடர்ந்தும் பலனடைவது; ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்பதாலேயே இந்தியாவும் அந்நாடுகளை எதிர்க்கும் நிலைக்கு அமெரிக்கா எவ்வாறு இந்தியாவைத் தள்ளுகிறது; இயல்பாகவும் வரலாற்றுரீதியாகவும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இந்தியாவுக்கு இருந்துவரும் சாதகமான நல்லுறவானது ‘அமெரிக்காவின் நட்புநாடு இந்தியா’ என்ற அந்தஸ்தின் மூலமாக எப்படிச் சிக்கலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது; உலக நாடுகளுடன் இந்தியா பல ஆண்டுகளாகப் பேணிவந்த அணிசேராக் கொள்கையானது பழங்கதையாய்ப் போனதெப்படி ஆகியவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இரையாகும் இறையாண்மை - Product Reviews
No reviews available

