காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியது.இந்து மதத்திற்கென அடிப்படையான சாத்திரநூல் ஏதுமில்லை.இந்து மரபு என்பதற்காக பகுத்தறிவுக்குப் பொருந்தாது எதையும் ஏற்க இயலாது சத்தியம் மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிட முடியும் எனக்கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது.இந்து சனாதனத்துக்கு எதிரானஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்கரும் பெரியாரும் ஓடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியில் பேசியவர் காந்தி.இரு மொழிகளும் ஒன்றாக இருக்க இயலாது என்கிறார் அ.மார்க்ஸ்.காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்தியபோது அதற்கு எதிராகத் தமிழகச்சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர்.அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்தி எழுதிய தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம்(தடை) என்னும் நூல்(1932) இங்கே முழுமையாக மீள்வெளியீடு செய்யப்படுகிறது.
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Product Reviews
No reviews available