எருமைப் பண்ணையும் பாலும்
Author: டாக். ந. குமாரவேலு, முனைவர் பி.சிவகுமார்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
எருமைப் பண்ணையும் பாலும்
தமிழக மக்கள் பண்டைய காலத்திலேயே கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கினர். இதற்குச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. கால்நடைகளில் எருமைகள் கொண்டாடப்பட்டுள்ளதற்குச் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முத்திரைகள் சான்றாக அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புமிக்க எருமைகளைப் பராமரித்து வளர்ப்பது குறித்தும், அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
தமிழகத்தில் காணப்படும் எருமையின் வகைகள், அந்த எருமைகளை வளர்ப்பதற்கான நவீன வழிமுறைகள், எருமைகளுக்கு உண்டாகும் நோய்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் எருமைக் கன்றுகளை வளர்க்கும் வழிகாட்டுதல்கள், எருமைப் பாலின் சிறப்பு என எருமை வளர்ப்புக்கான வழிமுறைகள் பற்றித் தெளிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, எருமையிலிருந்து கிடைக்கும் பாவின் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருள்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த செய்திகளையும் இந்நூல் முன்வைத்துள்ளது. பண்டைய காலத்தில் சிறப்புற்று இருந்த எருமை பிற்காலத்தில் தாழ்த்தப்பட்டது எவ்வாறு? பசும்பால் சிறந்ததா? எருமை பால் சிறந்ததா?, பால் கறப்பதற்கான வழிமுறைகள், சீம்பாவின் சிறப்புகள், பாலைப் பராமரிக்கும் வழிமுறைகள், பாலின் தரத்தைக் கண்டறியும் முறைகள், பாலில் இருந்து வெண்ணை, நெய், கோவா, குல்பி, மில்க் ஷேக், ஐஸ்கிரீம், தயிர், ரசமலாய், ரசகுல்லா முதலான பொருட்களை எவ்வாறு தயாரிப்பது போன்ற செய்திகளையும் இந்நூல் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கின்றது. எருமையின் சிறப்புகளை அறிந்து கொள்வதோடு, அவற்றை வளர்த்துப் பொருள் ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் கூறும் இந்நூலை உருவாக்கியவர்கள் கால்நடை மருத்துவர் நா.குமரவேலு மற்றும் பி.சிவக்குமார் ஆகியோர் ஆவார்.
எருமைப் பண்ணையும் பாலும் - Product Reviews
No reviews available

