என்னைப் பற்றி நான்(கவிஞர் மாயகோவ்ஸ்கி தன்வரலாறு)
என்னைப் பற்றி நான்(கவிஞர் மாயகோவ்ஸ்கி தன்வரலாறு)
1986ஆம் ஆண்டு மாஸ்கோ, ராதுகா பதிப்பகம் வெளியிட்ட விளாதிமிர் மாயகோவ்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதிகளை வாசித்தபோது கவிஞரின் கவித்துவ ஆற்றல் புலனாகியது. அதேவேளையில் அந்தத் தொகுப்பு நூலில் இடம் பெற்றிருந்த மாயகோவ்ஸ்கி ‘தன் வரலாறு’ மூலம் புதிய கோணத்தில் விவரித்திருந்த அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தன. ‘தன் வரலாறு’ பகுதியை மட்டும் 2004ஆம் ஆண்டு மொழிபெயர்த்தேன். ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பின்னர் மாயகோவ்ஸ்கியின் ‘தன் வரலாறு’ நூல் வடிவில் வெளியாகிறது.
புரட்சிக் கவிஞர் மாயகோவ்ஸ்கியின் போராட்டக் குணத்தையும் பல்துறை ஆற்றல்களையும் கவித்துவத்தையும் காதல்களையும் விவரிக்கிற ‘மாயகோவ்ஸ்கி: காலத்தை வென்ற புரட்சிக் கவிஞர்’ கட்டுரையை எழுதி இந்த நூலில் பின்னிணைப்பாகத் தந்துள்ளேன். அந்தக் கட்டுரை மாயகோவ்ஸ்கியின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது.
ந. முருகேசபாண்டியன்
என்னைப் பற்றி நான்(கவிஞர் மாயகோவ்ஸ்கி தன்வரலாறு) - Product Reviews
No reviews available

