ராமாயணம் (தேவி வனமாலி) (மஞ்சுள்)

0 reviews  

Author: தேவி வனமாலி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  275.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ராமாயணம் (தேவி வனமாலி) (மஞ்சுள்)

வால்மீகியின் ராமாயணத்தோடு, நம் நாட்டின் பல பகுதிகளிலும் ஆண்டாண்டு காலமாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வரும் ராமன் கதைகளிலிருந்து பல நிகழ்வுகளைச் சேர்த்து, தேவி வனமாலி அவர்கள் இந்த ராம காவியத்தைப் படைத்துள்ளார்கள். அன்பு, கடமை, தியாகம் போன்றவை நிரம்பி வழியும் இக்கதை இன்றைய வாசகர்களை மனத்தில் வைத்து சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த காதல் கதையாகத் திகழும் இக்காவியம், தன் மளைவியைத் தூக்கிச் சென்ற ராவணனிடமிருந்து அவளை மீட்க ராமன் தன் நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட சாகசப் பயணத்தைப் பற்றியும், அதில் அவள் எதிர்கொண்ட சோகமான, சுவையான, வீரம் நிறைந்த சம்பவங்களைப் பற்றியும். அவனுடைய தம்பி லட்சுமணன் மற்றும் அனுமானின் விசுவாசத்தைப் பற்றியும் விவரிக்கிறது.

ராமன் ஓர் அவதாரப் புருஷளாகக் கருதப்பட்டாலும், அவன் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் விடாப்பிடியாக தர்மத்தைக் கடைபிடித்து வந்ததன் மூலமே ஒரு தெய்வீகப் புருஷனாக உயர்ந்தான் என்று இந்நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

அர்பணிப்பு விசுவாசம். விடாமுயற்சி, அன்பு போன்றவற்றின் மூலம் அதிஅற்புதமான விஷயங்களை அடையக்கூடிய திறமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதை ராமனின் கதை நமக்குக் காட்டுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அனைவருக்கும் பிடித்த ஒரு நூலாக ராமாயணம் விளங்குவதில் வியப்பில்லை.

ராமாயணம் (தேவி வனமாலி) (மஞ்சுள்) - Product Reviews


No reviews available