கார்ப்பரேட்
கார்ப்பரேட்
கார்ப்பரேட் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது என்ன?
கை நிறைய சம்பளம். மனம் போல் வாழ்க்கை. கார். வீடு, ஐ ஃபோன். டிஜிட்டல் இத்யாதிகள், சுருக்கமாகச் சொன்னால் கார்ப்பரேட் வேலை என்பது எளிய மற்றும் நடுத்தர மக்கள் தம்மைக் கட்டிப் போட்டிருக்கும் பொருளாதார சங்கிலியில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு பொதுவழி!
ஆனால் உண்மையிலேயே கார்ப்பரேட் என்பது ஒரு அழகிய காட்சியா இல்லை வெறும் காட்சிப் பிழையா?
கடன் தொல்லையில் இருந்து தனது தந்தையைக் காப்பாற்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் மாரிக்கு பிடிமானக் கயிறாக கிடைக்கிறது ஒரு கார்ப்பரேட் வேலை!
அவளது கடந்த காலத்தின் அழிக்கப்படாத தவறுகள் அவளை எவ்வாறு பின் தொடர்கின்றன? வெறும் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணால் வெற்றி பெற இயலுமா?
கார்ப்பரேட் என்ற மாய உலகத்தில் மாரியின் கனவுகள் கணிந்தனவா அல்லது கசந்தனவா?
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எளிய மொழியில் இந்தக் கதையை அழகியல் ததும்பப் படைத்துள்ளார்
எஸ்.எஸ்.சபரீஷ்
கார்ப்பரேட் - Product Reviews
No reviews available

