சினிமா பாரடைசோ
Author: கிசெப்பே டோர்னடோரே;தமிழில்: யுகன்
Category: சினிமா
Stock Available - Shipped in 1-2 business days
சினிமா பாரடைசோ
சினிமா பாரடைசோ மூன்று மணி நேரப்படம், இதற்கு முன்பு மொழிபெயர்ப்பு செய்த அனுபவம் சிறிதும் இல்லை; படத்தை டிவிடியில் போட்டுப்போட்டுப் பார்த்தே எழுத வேண்டிய நிலை. இத்தகைய தடைகள் என்னைத் தயக்கம் கொள்ளச் செய்து, பின்நகர்த்தியபடி இருந்தன. இவ்வளவு பெரிய படத்தை என்னால் எழுத முடியுமா என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. பெரிய சவால்கள் பெரிய உத்வேகத்தைத் தரக்கூடியவை. உத்வேகம் செயல் வேகத்தை எனக்குத் தந்தது. ஆறு மாதகாலம் கடுமையாக உழைத்து சினிமா பாரடைசோ திரைக்கதையை மொழிபெயர்த்து முடித்தேன்.
இத்திரைக்கதையை நான் மொழிபெயர்க்க முக்கியக் காரணம் டோட்டோதான். படம் பார்த்த நாள் முதலாய் ஒவ்வொருநாளும், என்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவன் என்னுடனே இருக்கிறான். இன்னொரு முக்கியக் கதாபாத்திரம் அல்ஃபிரேதோ, அவரது அசாத்திய நடிப்பால் எதை எதையோ நடிப்பு என நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு எது நடிப்பு என்பதைப் புரிய வைக்கிறார். அவருக்கும், டோட்டோவுக்கும் இடையில் ஏற்படும் நட்பு மிக உண்மையானது. வெகு அபூர்வமானது.
ஒரு சாதாரண தியேட்டர் ஆப்ரேட்டராகத் தன் வாழ்வை எளிதாக முடிக்க நேர்ந்திருக்கும் சல்வடோரை ரோமின் புகழ்பெற்ற இயக்குநராக மாற்றியது அல்ஃபிரேதோவின் அன்பும் நட்பும் தான். ஆயிரக்கணக்கான அல்ஃபிரேதோக்களுக்கான தேவை நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது.
யுகன்
சினிமா பாரடைசோ - Product Reviews
No reviews available

