அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம்
அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம்
பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம்-இவற்றை நவீன ஆய்வுமுறைகளின் வெளிச்சத்தில் சுவைபடக் காட்சிப்படுத்தும் நூல் ‘அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம்.’
தாமிரபரணி நதிக்கரையிலிருந்து சிந்துவெளி வரை, சங்க இலக்கியத் தடங்களிலிருந்து மட்டக்களப்புத் தமிழகம் வரை, தமிழர் வரலாறு உலக நாகரிகத்தின் மிகப் பெரும் அரங்கேற்றத்தில் எவ்வாறு தன்னுடைய இடத்தைப் பிடிக்கிறது என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.
இரும்புத் தொழில் நுட்பத்தின் தொன்மை, கருப்புச் சிவப்பு மட்பாண்டங்களின் பரவல், பெண் பூசாரியம், சங்க காலச் சடங்குகள், புண்ணிய நிலங்கள் - இவை அனைத்தையும் மானிடவியல் நோக்கில் உயிர்ப்புடன் பேசுகின்றது இந்த நூல்.
நாற்பது ஆண்டுகளாக மானிடவியல் துறையில் பெரும் பங்களிப்புச் செய்த பக்தவத்சல பாரதி, பத்து ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் தமிழ் மரபின் விடுபட்ட வேர்களையும் மறைந்த கிளைகளையும் மீட்டெடுத்து வாசகரிடம் கொண்டுவந்துள்ளார்.
பண்டைத் தமிழரின் சிந்தனையும் சமூகச் செல்நெறியும் புதிய தலைமுறையோடு உரையாட வைக்கும் இந்த நூல், தமிழின் தொன்மையை உணர விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புதிய அழைப்பாகும்.
அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம் - Product Reviews
No reviews available

