அறிவும் நம்பிக்கையும்

அறிவும் நம்பிக்கையும்
இது மனிதனைப் பற்றிய விசாரம். காலம் நெடுகிலும், அறிவும், நம்பிக்கையும் பிரியும் இடத்தில் எல்லாம் நின்று அவன் சீர்தூக்கிய நெடுநோக்கு. மனிதன் அடைந்த முன்னேற்றம், பெற்ற அனுபவம், தேர்ந்த கல்வி ஆகியவற்றின் வழிநடைப் பதிவுகள். உலகெங்கணும் மனிதன் யாத்த இது போன்ற பதிவுகளில் ஒன்று நம் காலத்தில் விவேகாநந்தர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்மாழ்வார்.மனித இயல்பில் கால் ஊன்றி நிற்கும் அறிவும், நம்பிக்கையும், சிந்தனை வரலாற்றையே தம்முள் பகிர்ந்துகொண்டுவிடுகின்றன. அறிவுக்கும், நம்பிக்கைக்கும் முழுதும் உண்மையான இணக்கத்தைச் சாதித்தல் என்பது வாழ்க்கை, நெடிய அனுபவம், செறிந்த அகவாழ்வு ஆகியவை சேர்ந்து மனிதனுக்கு விடும் சவாலாகும். இந்தக் காலம் பரந்த சவாலைப் புரிந்துகொள்ள சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கையும், எழுத்துகளும் நமக்கு உதவுகின்றன. இந்தச் சவாலையும் மீறி மனித குலத்திற்கான ஆகப்பெரிய இணக்கச் சமன்பாட்டை, அறிவு, நம்பிக்கை என்ற இந்த இரட்டையின் விஷயத்தில் சாதித்திருப்பவர் நம் தமிழ்கூறும் நல்லுலகத்துத் திருக்குருகூர் நம்மாழ்வர் என்பது இந்த நூலாசிரியனின் தேற்றம். இந்த நூல் மனித குலத்தின் மிகப்பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு.