அரளிப்பூ மனிதர்கள்
அரளிப்பூ மனிதர்கள்
வலிகளோடு வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு படைப்பாளனின் எழுத்தமைவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ‘அரளிப்பூ மனிதர்கள்’ தொகுப்பைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணரமுடியும். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் நம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, நவீன வாழ்க்கை முறையால் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறைகளை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நாகரிக மாற்றத்தால் நஞ்சாகி வரும் வாழ்வு, அவ்வாழ்வு தரும் படிப்பினைகள், படிப்பினைகளைப் பொருட்படுத்தாத இளந்தலைமுறை, புறவுலகக் கவர்ச்சி உண்டாக்கும் மாயை, பேரிடர் காலத் தவிப்புகள் முதலானவற்றை இத்தொகுப்பு விரிவாகத் தோலுரித்துக் காட்டுகின்றது. குறிப்பாக, தமிழாய்வில் ஆழங்கால்பட்ட அறிஞர் ந.அறிவரசன் அவர்கள். தம் வாழ்வின் வேரிலிருந்தே சிறுகதைகளுக்கான உள்ளடக்கத்தைக் கண்டடைந்திருக்கிறார். இதனை அவருடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பழகி வருவதிலிருந்து உணர முடிகின்றது. குறிப்பாக, வீரியம் மிக்க எழுத்துகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் முதுமுனைவர் ந. அறிவரசன் அவர்கள், தம்முடைய அடுத்த பாய்ச்சலாகப் புனைவிலக்கியத்தைத் தொட்டிருக்கிறார்.
த. தனஞ்செயன்
வா.பகண்டை
அரளிப்பூ மனிதர்கள் - Product Reviews
No reviews available

