ஆன்மிக ஞாயிறு அடிகளார்

0 reviews  

Author: கிருங்கைசேதுபதி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  330.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆன்மிக ஞாயிறு அடிகளார்

கிருங்கை சேதுபதி அவர்கள் நமது ஆதீனத்தின் பிரான்மலை வள்ளல்பாரி மேல்நிலைப்பள்ளியில், பயின்றவர். நம்முடைய ஆதீனத்தோடு நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டவர், அடிகள்பெருமானை. சிறுவயதில் இருந்து தன் இதயத்துள் உருவகப்படுத்தி, அவரை ஆன்மநாயகராக எடுத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் நினைவுகூர்ந்து வருபவர். தமிழ் இலக்கிய உலகத்தில் எழுத்துப் பணியைச் செம்மையாகச் செய்துவரும் அவர். பாரதி பற்றிய நூல்களையும், நம் அடிகள் பெருமான் பற்றிய நூல்களையும் நிறையவே எழுதியிருக்கிறார். குறிப்பாக, நம் அடிகள்பெருமான் பற்றி அவர் எழுதிய நூல்கள் அற்புதப் படைப்புகள்.
அடிகள் பெருமானைப் பற்றி சதாசர்வகாலமும் சிந்தித்து, அவரைப் பற்றிப் பல மேடைகளில் நாள்தோறும் தொடர்ந்து பேசி. இன்று எழுத்துலகில் அவருக்கான பதிவுகளை மிகச்சிறப்பாக, செம்மையாக. அழகாக அருமையாக, நேர்த்தியாகச் செய்துவரும் பாராட்டுதலுக்குரிய கிருங்கை சேதுபதி அவர்களைப் பாராட்டுகிறோம்.
குறிப்பாக, அவரது படைப்புகள் எளிமையும், இனிமையும், அழகும். செறிவும். ஆழமும். அர்த்தமும் நிறைந்தவை. அந்த வகையில், அடிகள் பெருமானைப் பற்றி எண்ணுகிறபோது. அவர்மீது கொண்ட அளப்பரிய பக்தியை, நம்பிக்கையை, விசுவாசத்தை, தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அவர் விட்டுச் சென்ற பணிகளை நினைவுகூர்ந்து அவர் எழுதுவது மிகுந்த சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரியது.
‘ஆன்மிக ஞாயிறு அடிகளார்’. ஞாயிற்று ஒளியாய், உதயஞாயிற்று ஒளியாய். இருள்கடிந்து ஆன்மிக வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஆன்மிக ஞாயிறு அடிகளார் - Product Reviews


No reviews available