யோகி

யோகி
யோகாலயம் எனப்படும் பிரபல ஆசிரமத்தில் உள்ள ஒரு பெண் துறவியின் உயிருக்கு ஆபத்து என்று அப்பெண்ணின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் வர, அதிர்ச்சியுடன் அவளைக் காணச்செல்லும் அவளது தந்தைக்கு, ஆசிரம விதிகளைக் காரணம் காட்டி, காண அனுமதி மறுக்கப்படுவதில் ஆரம்பிக்கிறது நாவலின் கதைக்களம். பின்பு அடுத்தடுத்து நிகழும் கொலைகளுக்கும் காரணமோ, கொலையாளிகளோ கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க திறமை வாய்ந்த துப்பறியும் அதிகாரி ரகசியமாய் அங்கே துறவியாகப் போய்ச் சேர்கிறான். குற்றவாளிகளை மட்டுமல்லாமல் ஒரு உண்மையான யோகியையும் தேடும் தேடலும் தொடர்கிறது. மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஆவிகளுடன் தொடர்பு, ஏவல் சக்தி, செய்வினை, போன்ற அமானுஷ்யங்களும் பிணைந்து, நட்பு, காதல், கர்மா, உண்மையான ஆன்மீகம் ஆகியவையும் அடையாளம் காட்டப்படுவது இந்த நாவலின் தனிச்சிறப்பு.
யோகி - Product Reviews
No reviews available