யோகி ராம்சுரத்குமார்

0 reviews  

Author: பா.சு.சரவணன்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யோகி ராம்சுரத்குமார்

மேலிருந்து கீழே வருவதெல்லாம் வளம் தருபவை! அது மழையாக இருந்தாலும் சரி. மகானாக இருந்தாலும் சரி. அது இறைவனின் கருணையால் கிடைக்கும் வரம். புனித கங்கை நதியின் தீரத்தில் அவதரித்த மகான் யோகி ராம்சுரத்குமார். ‘கடவுளை அடைதல்’ என்கிற உண்மையைத் தேடிய பயணத்தில் அவர் தகப்பனாய் வரித்துக் கொண்டு, ‘இதுதான் கடவுள்’ என சரணடைந்த புனிதம் அருணை மலை. அவரை முதன்முதலாக பார்த்தவருக்கு மாத்திரம் அவர் பிச்சைக்காரனாய்த் தெரியவில்லை; அவர் தன்னையே பிச்சைக்காரன் என்றே சொல்லிக்கொண்டார். ஆனால் இந்தப் பிரபஞ்சப் பேரரசன் மகேஸ்வரனையே தமது தந்தை என்று உரிமையோடு சொல்கிறார். அவரது ஆசீர்வாதம் எல்லாம் அவரது தகப்பன் என்று சொல்லிக் கொண்ட அந்த அருணாசலத்தின் பெயராலேயே கிடைத்து வருகிறது.

இந்த உலகத்திற்கு அவர் விட்டுச் சென்ற மிகப் பெரிய விஷயம், ‘யோகி ராம்சுரத்குமார்... யோகி ராம்சுரத்குமார்... யோகி ராம்சுரத்குமார்... ஜெயகுருராயா...’ என்கிற நாமம்தான். இந்த நாமத்தைச் சொல்லி பூமியை ஓங்கி உதைத்தால் அது பிளந்துகொள்ளும். அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது அந்த மந்திரம் என உறுதி அளிக்கிறார். ‘அந்த நாமம் வாழ வழிகாட்டும். பிறவிக் கரையேற்றும்’ என்று சத்தியம் செய்துள்ளார்.

அந்த மகானின் மகா பிரசாதம் அது என்றால் அவரது வாழ்க்கை முழுக்க நடந்த ஒவ்வொரு நிகழ்வும் கீதையாய் நமக்குள் பாடம் நடத்திச் செல்லும். ‘கடலில் விழுந்த துளியில் எந்த துளி மழைத் துளி’ என்று முடிவு செய்ய முடியாததைப் போல புத்தகம் முழுக்க இருக்கும் ஒவ்வொரு சம்பவமும் வியக்க வைக்கும். எளிமையான சொல்லாடலால் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியுள்ளார் நூலாசிரியர். இந்தப் புத்தகம் கடவுளின் குழந்தையை உங்கள் மனதுள் மலர்த்தும்!

யோகி ராம்சுரத்குமார் - Product Reviews


No reviews available