விழுமுன் எழுமின்
Author: தமிழ் இளவல் மதுரை இராமகிருஷ்ணன்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
விழுமுன் எழுமின்
ஒரு தலைப்புக்குள் ஒரு கவிஞரை அறிமுகம் செய்கிறார். அவர்களின் கவிதையைக் குறிப்பிட்டு விளக்குகிறார். அப்படியே முந்தைய தலைமுறை படைப்பாளர் ஒருவரைத் தொட்டுக் காட்டுகிறார். வாய்ப்புக் கிடைக்கும் இடத்தில் மகாபாரதப் புராண இதிகாசக் கதைகளைச் சொல்லி அதன் பாத்திரங்கள் மூலம் வாழ்வியலை உணர்த்துகிறார். அதோடும் நிற்காமல் சங்க இலக்கியத்தையும், சமகாலத்தையும் இணைத்துக் காட்டுகிறார்.
ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார் ‘அன்னை தெரசாவிடம் கொடுப்பதற்குப் பணம் பொருள் என்று ஏதுமில்லை, ஆனால் அவருக்கு நேரமிருந்தது. கைவிடப்பட்ட பலரின் கடைசி நிமிடங்களில், ஆதரவுக் கரம் நீட்டி ஆறுதல் சொல்கிறார். தங்களை அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போல உணரச்செய்ய அவர் கொடுத்ததெல்லாம் நேரம் மட்டுமே’ என்கிறார். அதுபோலதான், இவ்வளவு அறிவுச் செல்வங்களைத் திரட்டிக் கொடுத்து, நம்மை நம்பிக்கை அடையச் செய்ய தன் விலைமதிப்பற்ற நேரத்தைத்தான் நூலாகத் தந்திருக்கிறார் இராமகிருஷ்ணன் .
மு.வேடியப்பன்
பதிப்பாளர்
விழுமுன் எழுமின் - Product Reviews
No reviews available

