வில்லோடு வா நிலவே
உலகின் மிகப்பெரிய நாகரிகங்களுள் ஒன்றான திராவிட நாகரிகத்தின் பழங்கூறுகள் பயிலப் பயில நான் எத்தனை பெருமை மிக்க ஓர் இனத்தின் எச்சமான இருக்கிறேன் என்று தோளும் மனசும் எப்படித் துடிக்கின்றன தெரியுமா? இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளுயம் அறிஞர் பெருமக்களின் ஆராய்சிசி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது. காதலாலும் வீரத்தாலும் தீர்மானிக்கப்பட்ட ஒரு கலாசாரம் மீசை முறுக்கி மெல்லச் சிரிக்கிறது.