தொண்டர் திருநாவுக்கரசரின் சரிதம் (நாவல் வடிவில் நால்வர் சரித்திரம்)
தொண்டர் திருநாவுக்கரசரின் சரிதம் (நாவல் வடிவில் நால்வர் சரித்திரம்)
தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர், திருஞானசம்பந்தரால் அப்பர் என்று அன்போடு அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர்.
இவரது வாழ்க்கை பல சோதனைகளையும் பல அசாதாரணக் கணங்களையும் கொண்டது. இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தது, தமக்கையார் திலகவதியாரின் அரவணைப்பிலே வளர்ந்தது, இறைவனது சோதனையால் சூலை நோய்க்கு ஆட்பட்டுத் சைவ நெறிக்குத் திரும்பியது, சமணர்களாலும் மன்னன் மகேந்திர பல்லவனாலும் பல தொல்லைகளுக்கும் சோதனைகளுக்கும் ஆட்பட்டு சிவபெருமானின் அருளால் அதிலிருந்து மீண்டெழுந்தது, நாடெங்கும் பயணம் செய்து கவனிப்பாரற்றுக் கிடந்த பல கோயில்களுக்கு உழவாரப் பணியின் மூலம் புத்துயிர் அளித்தது, சைவ நெறியைப் பரப்பியது, திருநாவுக்கரசர் என்ற பெயரை அடைந்தது, இவருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையே ஏற்பட்ட தெய்வ நட்பு என இந்தப் புத்தகம் அப்பரது வாழ்வை நம் கண்முன் விரிக்கிறது.
தனது முந்தைய புத்தகங்களைப் போலவே, தனது அழகிய மொழியில் திருநாவுக்கரசரது சரித்திரத்தை நேர்த்தியாகப் படைத்துள்ளார் சத்தியப்பிரியன்.
தொண்டர் திருநாவுக்கரசரின் சரிதம் (நாவல் வடிவில் நால்வர் சரித்திரம்) - Product Reviews
No reviews available

