வசூல் ராஜாக்களின் வாழ்க்கை
வசூல் ராஜாக்களின் வாழ்க்கை
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அது வெளியே சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமையான அனுபவமாக இருக்கும். கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமல்ல, கடனை வசூலிப்பவர்களுக்கும்!
கடன் வாங்கியவர்களைப் பற்றிப் பல கதைகளை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் வீடு தோறும் சென்று கடனை வசூலிக்கப் படாத பாடு படும் மனிதர்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா? அவர்கள் பார்வையிலான வித்தியாசமான நூல் இது.
எந்தச் சூழலில் மனிதர்கள் கடன் வாங்குகிறார்கள், கடனைத் திருப்பித் தர முடியாத போது அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், கடன் வசூலிப்பவர்கள் எதிர்கொள்ளும் உணர்வுரீதியான போராட்டங்கள் எவை, கடன் வசூலிப்பவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் எவை என்பவற்றைப் பற்றி மனத்தைத் தொடும் தமிழில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்.
பல்லாண்டு காலம் இவர் வங்கித் துறையில் வசூல் ராஜாவாக இருந்து பல அனுபவங்களைப் பெற்றிருப்பது, இந்த நூலுக்குப் பெரும் பலம் சேர்க்கிறது.
வசூல் ராஜாக்களின் வாழ்க்கை - Product Reviews
No reviews available

