வரலாற்றில் நாயகிகள்
வரலாற்றில் நாயகிகள்
ஆசிரியரைப் பற்றி...
இந்த நூலின் ஆசிரியரான திருமதி. புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கிறார். கணிதத்தில் கோல்ட் மெடலுடன் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார். பாரதீய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றபின், எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார். வார, மாத இதழ்களில் இவருடைய கதைகள் தொடர்ந்து வெளியாகின்றன. சிறார் கதைகள், கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், புதினங்கள் மற்றும் நூல் திறனாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். பற்பல போட்டிகளில் இவருடைய படைப்புகள் பரிசுகளை வென்றுள்ளன. பல்வேறு புதினங்கள் அச்சில் வெளி வந்துள்ளன. இவருடைய சிறார் கதைகள், சமூக நாவல்கள் மற்றும் வரலாற்றுப் புதினங்கள், வானதி பதிப்பகம் வாயிலாக அச்சில் வெளிவருகின்றன. வானதி பதிப்பகத்தின் தொடர் ஆதரவுடன் வெளிவரும் பதினேழாவது நூல் இது.
வரலாற்றில் நாயகிகள் நூலைப் பற்றி...
வரலாற்றில் அதிகம் பேசப்படாத பெண் வீராங்கனைகளின் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கைச் சம்பவங்கள், இங்கே குறுநாவல்களாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஒனகே ஒபாவாவின் ஆயுதம் வெறும் உலக்கை. பெலவாடி மல்லம்மா, பசுக்களுக்காக சாம்ராட் சிவாஜியை எதிர்த்தவள். துளுவ ராணி அப்பக்கா, போர்த்துக்கீசியருடன் தொடர்ந்து போரிட்டவள். மிளகு ராணி சென்னபைராதேவி, அந்நியரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினாள். பழங்குடிப் பெண் சம்மக்கா, சுதந்திர உணர்வுடன் வலிமையான காகதீயப் பேரரசை எதிர்த்து நின்றவள். தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த தமிழ்ப் பெண் தில்லையாடி வள்ளியம்மை, பிறந்த மண்ணின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினாள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்த்திய சாகசங்கள், இந்தக் குறுநாவல்களில் பேசப்படுகின்றன. அதிகம் பேசப்படாத பெண்களின் வரலாற்றுப் போராட்டங்களை அறிந்துகொள்ள உதவும் திறவுகோல் இந்த முயற்சி.
- புவனா சந்திரசேகரன்
வரலாற்றில் நாயகிகள் - Product Reviews
No reviews available

