வாழ்வு தரும் மரங்கள்

0 reviews  

Author: ஆர்.எஸ்.நாராயணன்

Category: விவசாயம்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வாழ்வு தரும் மரங்கள்

வாழ்வு தரும் மரங்கள் என்னும் இந்நூலில் அரசமரம் ஆலமரம் நாவல் மரம் பலா மரம் வேம்பு நெல்லி பனை கொய்யா மூங்கில் உள்ளிட்ட 78 வகையான மரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செய்து மருத்துவ ரீதியாக விளக்குகிறார்.குடல்புண் மூலப்புண் மேகப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை ஆறச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் விந்து விருத்தி செய்ய பாலுணர்வு தூண்டப்பட பாலியல் நோய்களைக் குணப்படுத்த மலட்டுத்தனம் நீங்க பிரசவம் எளிதாக அமைய தாய்ப்பால் தாராளமாகச் சுரக்க எதை எதை என்னென்ன பக்குவத்தில் உட்கொள்ள வேண்டும் என்பவற்றை எடுத்துரைக்கிறார்.மாதவிடாய் வயிற்று வலிக்கு நிவாரணம் பெற கர்ப்பம் கலையாதிருக்க சிறுநீரகத்தில் கல்லடைப்பைப் போக்க கட்டிகள் உடைய மரங்கள் பயன்படுவதை விளக்குகிறார்.

        சர்க்கரை நோய் மஞ்சள் காமாலை ஈரல் இருதய நோய்களைக் குணப்படுத்த தசைப்பிடிப்பு இடுப்புவலி தலைவலி பல்வலி வாதம் பித்தம் கபம் இருமல் போன்ற நோய்கள் தீர மரங்கள் பயன்படும் முறை விளக்கப்படுகிறது.குழந்தைகள் கால்நடைகளின் நோய்களைக் குண்ப்படுத்த ஆயுள் விருத்தி பெற உடல் அழகு பெற கண்ணோளி காதொலி இழக்காமல் இருக்க உட்கொள்ள வேண்டியவை எவை என்பது எடுத்துக்காட்டப்படுகிறது.எழுமிச்சம் பழச்சாறை உடலில் தேய்த்துக்கொண்டால் கொசுக்கள் கடிக்காது என்றும் மருதாணிக்குப் புண் ஆற்றும் தன்மை உள்ளது என்றும் கடல் கொந்தளிப்பு  சுனாமி மூலம் நில அரிப்பைத் தடுக்க அலையாத்தி மரங்களை வளர்க்கலாம் என்று மரங்களின் மருத்துவத் தன்மைகளும் விவரிக்கப்படுகின்றன.

வாழ்வு தரும் மரங்கள் - Product Reviews


No reviews available