வள்ளுவரும் வடிவேலுவும்
வள்ளுவரும் வடிவேலுவும்
வள்ளுவரை வகுப்பறையில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கிறார்கள். 'அகரமுதல எழுத்தெல்லாம்' என்கிற அந்த முதல் குறள் வெண்பாதான் நமக்கு வள்ளுவன் யார் என்று அறிமுகம் செய்து வைக்கின்ற விசிட்டிங் கார்டு.
தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்' என்கிற உலகாய்ந்த உண்மையை? குழந்தை தவழும்போதே கற்றுக்கொண்டுவிடுகிறது. தப்பு செய்பவர்களை சாமி கண்ணைக் குத்தும் என்றால் இதுவரை யாரும் எந்த தப்பும் செய்ய வில்லையா? சாமி மட்டும் தப்பு செய்பவர்களின் கண்ணைக் குத்துவதாக இருந்தால், இன்று உலகத்தில் அனைவரும் கண் இல்லாமல்தான் அலைய வேண்டும். சாமி கண்ணைக் குத்தும் என்கிற முதல் பொய்யை நம்பித்தான் ஒவ்வொரு அறிவுப் பயணமும் ஆரம்பமாகிறது.
அப்படியான பொய்யும். புனைச்சுருட்டுக்களையும் பெற்றோர்களின் வழி கேட்டுக் கேட்டு வளர்கின்ற நமக்கு உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான வித்தியாசம் புரியாமல் தடுமாறுகிறோம். அந்தத் தடுமாற்றத்தைப் பயன்படுத்தி, வரலாறுகளைத் திருத்தியும், பொய்களை மெருகேற்றியும் ஒரு மனித கூட்டத்தையே ஆட்டு மந்தைகளாக்கி ஆட்டுவிக்கின்ற கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறார்கள் நமது இன எதிரிகள். ஒன்று எதிர்த்து நின்று அழிக்கப் பார்கிறார்கள். முடியாவிட்டால் அணைத்து அருகாமையில் வைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்.இந்த சூழ்ச்சி வலையிலிருந்து வள்ளுவன் கூட தப்ப முடியவில்லை.வள்ளுவன் திராவிடத்தான். கருப்பு அங்கிக்குச் சொந்தக்காரன்.
அப்படியான வள்ளுவனையே, காவிச் சாயம் பூசி, தனதாக்கி அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம் வள்ளுவனை மீட்டெடுத்து உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றதில் அவர்களின் பங்கு என்று எதுவுமில்லை.இதுதான் எனக்குள் எழுந்து நின்ற கேள்வி.அந்தக் கேள்விக்கான பதில் தேடும் முகமாக நான் தேடிய விளக்கங்களின் தொகுப்புதான் இந்த 'வள்ளுவரும் வடிவேலுவும்.
வள்ளுவரும் வடிவேலுவும் - Product Reviews
No reviews available

