வாழ்க,வளமுடன்!

0 reviews  

Author: வேதாத்திரி மகரிஷி

Category: ஆன்மிகம்

Out of Stock - Not Available

Price:  85.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வாழ்க,வளமுடன்!

அறுசுவை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி சாப்பிடும்போதே, 'அவ்வளவுதான் சாப்பிட முடியும்;இனி சாப்பிட்டால்,ஜீரணமாவது கடினம்' எனும் வேகத்தடை நிலை ஒன்று வரும். "வேண்டாம்;போதும்!" என அறிவு உத்தரவிடும். 'சரிதான்; இத்துடன் போதும்!' என்று செயல்திறனும் ஒரு முடிவுக்கு வரும். உடனே, நீங்கள் எழுந்திருந்து, கையலம்பச் செல்கிறீர்கள் எனில், அதுதான் துறவு!

     பசித்தால்தான் சாப்பிடுகிறோம். வாயில் போட்டு, நன்றாக மென்று சுவைத்துச் சாப்பிடுவதுடன் நம்முடைய செயல் முடிகிறது. அதையடுத்து என்ன நிகழ்கிறது தெரியுமா?

     ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஞ்ஜை, சுக்கிலம் என ஏழு தாதுக்களாக உணவு மாறுகிறது. இந்த ஏழும், நம் உடலையும் உயிரையும் பாதுகாக்கின்றன. நாம் செய்த செயலால் உண்டாகிற விளைவு, நம்மைக் காக்கிறது எனில், அந்தக் காக்கும் செயலைச் செய்தது யார்? அந்தப் பொருட்களாக, அந்தந்தத் தன்மையில் இருந்தபடி, இயக்கத்துக்குத் தக்க விளைவைத் தருபவன் , .இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?!

     உணவின் தரமும், அது உடலுக்குள் சென்று ஏற்படுத்துகிற மாற்றமும் உயிர்ச்சக்தியைத் தூண்ட... அந்த உயிரானது, மனமாக இயங்குகிறது. உயிரும் உடலும் இணைந்து இயங்கும் வேளையில் உடலைச் சமன் செய்ய, உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு ஆகிய நான்கு விஷயங்கள் தேவைப்படுகின்றன.

     இவற்றில், முதலாவதான உணவை அலட்சியம் செய்வது தவறு. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக உண்பதும், முரண்பட்ட உணவைச் சாப்பிடுவதுமாக இருந்தால், உடல் இயக்கம் சீர்குலையும்; தீடிரென நோய்கள் வந்து, உடலைப் பாடாய்ப்படுத்தும்!

     தோன்றி, இயங்கி, வளர்ந்த பிறகு அழிவதே உடலின் இயல்பான நடைமுறை. அதாவது, வாழ்க்கை எனும் பயணத்துக்கு வசதியான, பொருத்தமான வாகனமாக இருக்கிறது உடல். அந்த உடலைப் பழுதடையாமல் கவனித்தால்தான், பயணம் இனிதாகும்! நமது வாகனமான உடல், இறைத்தன்மை  கொண்டது! ஆகவே, உடலைப் பேணுவதில் அக்கறையும் பொறுப்பு உணர்வும் மிகவும் அவசியம்.

வாழ்க,வளமுடன்! - Product Reviews


No reviews available