FD vaalvangu-vaazhalam-vaa-part-2-81182.jpg

வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 2)

0 reviews  

Author: ′திருப்புகழ் திலகம்′ மதிவண்ணன்

Category: தன்னம்பிக்கை

Stock Available - Shipped in 1-2 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 2)

உதடு திறந்த மாத்திரத்தில் உரைபொழியும் உன்னதமும் கைவைத்த அதேகணம் கவிதை எழுதும் ஆற்றலும், அருவியென திருப்புகழ் பாடி அருச்சனை செய்யும் அருளும் ஒருசேரப் பெற்ற மதிவண்ணன் திருவாரூரில் கண் மலர்ந்தவர். சென்னையில் கால் பதித்தவர். இயற்பெயர்: சு.ராஜகோபாலன், பிறந்த நாள்: 15-12-1949 இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் சென்று எண்ணற்ற சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ள இவர் உலகளவில் நடந்த திருக்குறள், கம்பர், பாவேந்தர் கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்.

திருப்பதி, திருவண்ணாமலை, ரங்கம், சபரிமலை, பழநி திருத்தல விழாக்களின் வர்ணனைகளை தொலைக்காட்சிகள் மூலம் வழங்கியுள்ள இவர் தமிழ்நாடு அரசின் முதல் பாரதியார் விருதை 1997ல் பெற்றவர்.‘கவிழ்த்து வைத்த பாற்குடம்போல் உணர்ச்சி பொங்கி வழிகிறதே! யார் இந்த இளைய பாரதி?’ என திருமுருக கிருபானந்த வாரியாரும், ‘மதிவண்ணன் உரை, ஒரு கவிதை உரையாகவே அமைந்திருந்த பாங்கினைக்கண்டு நான் என் உள்ளத்தைப் பெரிதும் அவர்பால் பறிகொடுத்தேன்’ என கலைஞர் கருணாநிதி அவர்களும் பாராட்டியுள்ளதே மதிவண்ணனை அடையாளம் காட்டப் போதுமானவை.

நூல் குறிப்பு:

ஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான். ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து, அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது என்னும் சவாலான முயற்சி. இந்த முயற்சியில் திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கத்திலும் பறைசாற்றுகிறது. இக்கட்டுரைத் தொடர் எழுதப்பட்ட காலத்திய சம்பவங்கள், பின்னாளில் படிப்போருக்குப் பொருத்தமில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அந்த ஒவ்வொரு கட்டுரையும் வலியுறுத்தும் நற்பண்புகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை என்பது உண்மை..

வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 2) - Product Reviews


No reviews available