உள்ளங்கையில் உடல்நலம்

0 reviews  

Author: பி.எம்.ஹெக்டே

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  222.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உள்ளங்கையில் உடல்நலம்

புனி மது இவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என்ற வாசகத்தைத் திரைப்படங்களிலும் அட்டைகளிலும் அச்சிட வலியுறுத்தும் எந்த அரசும் அவற்றின் உற்பத்தியை நிறுத்தச் சொல்வதில்லை ஏனென்றால் அதிலிருந்து வரும வருமானத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை.'

ஜாங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்காைைவ உண்மையில் ஜாகிங் தரும் எல்லாப் பயகைளையும் நடைப்பயிற்சியே தந்துவிடுகிறது ஆனால் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பதற்காகச் சொல்லும் பொயயை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது"

உ மளநோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத்தான் தூங்குவார்கள் அதை மறைத்து சரியாகத் தூங்காதவாகள் மனநோயாளியாகி விடுவார்கள் என்று இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை. தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற போரவையில் திட்டமிட்டு பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் இவை:

'உயிரின் சாரம் கொழுப்புச் சத்தில்தான் உள்ளது. ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார் ஏனென்றால் இதனால் உயிரனு (செல்) புதுப்பிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. நம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதற்கான ஒரே வழி நம் பெற்றோர்களை நாம் மாற்றிக்கொள்வதுதான்!'

"நமது சீதோஷ்ண நிலையைப் பொருத்தவரையில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கோதுமையைவிட அரிசியே சிறந்த உணவு""

இவற்றையெல்லாம் சொன்னவர் யூட்யூப் பிரபலம் யாருமில்லை. நீண்ட நெடிய மருத்துவ அனுபவம் கொண்ட கார்டியாலஜிஸ்ட் மருத்துவ மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான நாட்டின் உயரிய அங்கீகாரமான பி.சி.ராய் விருது பெற்றவர் பதம பூஷண் டாக்டர் பி.எம்.ஹெக்டே

நவீன மருத்துவத்தின் அபத்தங்களையும், அபாயங்களையும் பற்றி டாக்டர் ஹெக்டே தொடர்ந்து குரல எழுப்பி வருகிறார். ஆயுர்வேத மருத்துவம் மனிதகுலத்திற்கு எப்பேர்ப்பட்டதொரு அருட்கொடையாகத் திகழ்கிறது என்பதையும் சர்வாதிகார மனம் கொண்ட மேற்கத்திய நாடுகளால் இயக்கப்படும் பன்னாட்டு 'மருத்துவ மாஃபியா" நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏவிவிடும் தவறான கற்பிதங்களையும், பரிசோதனைகளையும் போட்டுடைக்கும் இவரது காணொலி உரைகள் (Ted Talks) சமீபமாக சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் உடல் நலம் சார்ந்த முக்கியமான நூல்களை இவர் தொடர்ந்து எழுதி வருகிறார் அவரது 'How to maintain Good Health என்ற நூலின் தமிழாக்கம் இது

உள்ளங்கையில் உடல்நலம் - Product Reviews


No reviews available