அவன் அவள்

0 reviews  

Author: கோகுலவாச நவநீதன்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அவன் அவள்

பெண்களை ஆண்களும், ஆண்களை பெண்களும் இடையறாது ஈர்த்துக்கொண்டே இருப்பதுதானே உலகம்! நம் அலங்காரம் முதல் அகங்காரம் வரை அனைத்துக்கும் காரணம் இந்த ஈர்ப்புதான். அதே சமயம், பெண்களைப் பற்றி ஆண்களும், ஆண்களைப் பற்றிப் பெண்களும் அதிகம் புரிந்துகொள்ள முற்படுகிறார்கள். இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுவது இந்த ஈர்ப்பையும் புரிதலையும் பற்றித்தான். நூலாசிரியர் கோகுலவாச நவநீதன் இப்படியொரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் அளவுக்கு உழைத்திருக்கிறார். உளவியல் மீதும் உறவு நிலைகளின் விஞ்ஞானப் பின்னணி மீதும் இயல்பாகவே தேடல் உள்ளவர் அவர். புத்தகம் முழுமையும் வாழ்வின் அடிப்படையைப் பேசினாலும் அது உங்கள் தலையில் கனம் ஏற்றாமல் ஜாலி, கேலியாகவே பயணிக்க வைத்திருப்பது அவரின் சாமர்த்தியம்.

பெண்கள் ஏன் ஷாப்பிங்கை விரும்புகிறார்கள், ஆண்கள் ஏன் போதை வயப்படுகிறார்கள் என இந்தப் புத்தகம் பல கேள்விகளை எழுப்பும். அது சும்மா விதண்டாவாதமாக, அற்ப ஆராய்ச்சியாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம். ‘தக்காளி என்ற பழம் ஏன் காய்கறி மார்க்கெட்டில் இருக்கிறது?’ எனக் கேட்டால் என்ன செய்வீர்கள்? சிரிப்பீர்கள். இயல்பாக நமக்குப் பழகிப்போன விஷயங்களில் கேள்வி கேட்டால் அப்படித்தான் சிரிப்பு வரும். ஆனால், இது வெறும் சிரிப்பல்ல. உண்மையில் நம் அன்றாட வாழ்வை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும்; அதில் கேள்வி எழுப்ப வேண்டும் என்றுதான் உளவியல் வலியுறுத்துகிறது. சின்னச்சின்ன விஷயங்களில் ‘நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?’, ‘நம் வாழ்க்கைத்துணை ஏன் இப்படி இருக்கிறார்?’ எனக் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டால் நிச்சயம் பெரிய விஷயங்களில் பிரச்னைகள் எழாது. இன்று பல குடும்பங்களில் எழும் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உளவியல் கேள்விகள் மருந்தாகும். அப்படிப்பட்ட கேள்விகள் இந்த நூலில் எக்கச்சக்கமாய் இடம்பெற்றிருப்பது வாசகர்களாகிய உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

அவன் அவள் - Product Reviews


No reviews available