உலகப் புகழ்பெற்ற காதலர்கள்
உலகப் புகழ்பெற்ற காதலர்கள்
'காதல் காதல் காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்' பாரதியார் சொன்ன வரிகளில் எனக்குப் பிடித்த வரிகள் இவை. இந்த உலகின் ஒரே உன்னத மொழி காதல் தான். ஆனால் எல்லா மொழிகளிலும் அதை அனுபவித்து ரசித்தவர்களின் முடிவு கோரம்தான். ஆனாலும் நேற்றும் காதலித்தார்கள். இன்றும் காதலிக்கிறார்கள்.
நாளையும் காதல் செய்வார்கள். ஏனென்றால் காதல் அவர்களை விடுவதில்லை! மானிடத்தின் முடிவுபரியந்தம் அது ஒவ்வொரு உயிரின் உள்ளத்திலும் தேங்கி நிற்கும். அந்தக் காதலுக்கு நான் இந்தப் புத்தகத்தில் உள்ள 50 காதல் கதைகளையும் காணிக்கையாக்குகின்றேன்.
கவலையில்லாதன் கூட இனி உலகில் பிறக்கலாம். ஆனால் நிச்சயமாக காதலில்லாமல் எவனும் இங்கு பிறந்து சாக மாட்டான். பணத்தைக் கடனாகக் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். ஆனால் காதலைக் கொடுக்கலாம். வாங்கலாம். ஏனென்றால் காதலே நிம்மதி!
உலகப் புகழ்பெற்ற காதலர்கள் - Product Reviews
No reviews available

