டிரெமோலோ
டிரெமோலோ
‘ட்ரெமெலஸ்’ என்கிற லத்தீன் சொல்லுக்கு ‘நடுங்குதல்’ என்பது பொருள். ‘ட்ரெமோலோ’ என்பது இசையில் ஒரே சுருதியை மீண்டும் மீண்டும் இசைப்பதன் மூலமாகவோ அல்லது இரட்டைச் சுருதிகளை மாறி மாறி இசைப்பதன் மூலமாகவோ நிகழ்த்துகிற ஒரு வகை துடிப்பதிர்வு விளைவு நுட்பம். இத்தொகுப்பிலுள்ள ‘ட்ரெமோலோ’ என்ற கதையில் இந்நுட்பம் கதையின் முக்கிய கருவாக வருகிறது. அத்தோடு, இசைக்குறிப்பு எழுதுகிற ஐங்குறுங்கோட்டில் ‘ட்ரெமோலோ’ ஒரு சீரிசையாய் வந்தமர்வதுபோன்று, இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளிலும், ஒருவர் அல்லது இருவரின் மானுட உணர்வுகளின் நடுக்கம், என் ஐவிரல்களின் வழியாய் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. இந்த உணர்வுகளின் சீரிசைக்குள் சில மணித்துளிகளாவது சிக்குண்டு கிடந்து, பத்து கதைகளால் உருவாகியுள்ள இக்கற்பனையுலகில் சஞ்சரிக்கப்போகிற உங்களுக்கு என் இதயப்பூர்வமான வரவேற்பும் வாழ்த்தும்.
- ரம்யா அருண் ராயன்
டிரெமோலோ - Product Reviews
No reviews available

