குருதியில் நனையும் காலம்

0 reviews  

Author: ஆளுர் ஷாநவாஸ்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

குருதியில் நனையும் காலம்

உலகளவில் தங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தாக்குதல்கள்.பின்னடைவுகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றின் பின்னிலையில்  "சுயபரிசோதனை" மனநிலையில் ஒன்று முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.நமது தோல்விகளுக்கு, ஏமாற்றங்களுக்கு காரணம் என்ன? நவீன உலகில் நாம் சுமந்து வந்துள்ள பழைய நம்பிக்கைகளை எவ்வெவ்வகையில் துலக்கித் தூய்மை செய்ய வேண்டும், புதுபிக்க வேண்டும் என்கிற கேள்விகள் மெல்லிய குரலில் மேழெழும்பியுள்ளன. துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகளை தூக்கி எறிந்து ஒரு ஜனநாயக அரசியலமைவை உருவாக்கும் நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் இளைஞர்களின் பங்கு பெரிது. சொல்லப்போனால் உலகளவில் எல்லோரும் பாடம் கற்றுக் கொள்ளத்தக்க புதிய அனுபவமாக அராபிய வசந்தம் இன்று விடிந்துள்ளனது. உருவாக்கக்கூடிய இந்த அரசியல் சட்டங்கள் இறுக்கமான இஸ்லாமிய அடிப்படை அரசுகளாகவன்றி எல்லோரையும் உள்ளடக்கிய இன்றைய துருக்கியை முன்மாதிரியாகக் கொண்டதாக நாம் கவனிக்க தவறலாகாது.

 இன்னும் பல அம்சங்களில், நம்பிக்கைகளில், மரபுகளில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற மனநிலை உருவாகிவருகிறது. உலகளவில் முஸ்லிம் சமூகங்களில் இத்தகைய விவாதங்கள் நடைபெறுகின்றன.

இத்தகைய "சுயபரிசோதனை" மனநிலை  இங்கும்  உருவாகியுள்ளதற்குச் சான்றாக அமைகிறது. ஆளுர் ஷா நவாசின் இக்கட்டுரைகள்.

                                                                                                                                             ஆர்.மார்க்ஸ்

குருதியில் நனையும் காலம் - Product Reviews


No reviews available