திப்பு சுல்தான்(எனது கனவுகள்)
திப்பு சுல்தான்(எனது கனவுகள்)
எனது கனவுகள்
பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடி இறுதியில் உயிர்த்தியாகம் செய்த திப்பு சுல்தான் (1750 நவம்பர்-20-1799-மே-4) கர்னாடகத்தில் இன்றைய பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தேவனஹள்ளியில் பிறந்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் விஜயநகரத்தின் ஆட்சியின் கீழிருந்த ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையுடைய உரிமையைக் கைப்பற்றிய மைசூர் உடையார்களுடைய படைத்தளபதியும் பின்னர் 1761-ல் மைசூரின் ஆட்சியாளருமாகிய நவாப் ஹைதரலியுடைய (1720-1782) இறப்பினைத் தொடர்ந்து மைசூர் நவாபாக அதிகாரத்தை அடைந்த திப்பு சுல்தான் பதினேழு ஆண்டுகள் மட்டுமே மைசூரின் மன்னனாக விளங்கினார்.
இளைஞராக இருந்தபோதே தந்தையாருடன் இணைந்தும் பின்னர் அதிகாரத்தை அடைந்த போது கிழக்கிந்தியக் கம்பெனியுடைய ஆக் கிரமிப்பிற்கு எதிராக இடைவிடாது போரில் ஈடுபட நேரிட்ட திப்பு சுல்தான் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள்ளாக மைசூர் நாட்டை ஒரு மிகச்சிறந்த வேளாண் தொழில் இராணுவ சக்தியாக வளர்த்தெடுத்திருந்தார்.
வீரமிக்க போராளி என்கிற நிலையில் மைசூர்ப்புலி என்று வாழ்ந்திருந்த காலத்திலேயே ஐரோப்பாவில் புகழ்பெற்றவராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் இலக்கிய பொது அறிவு நூல்களுடைய மிகச்சிறந்த வாசகராகவும் சேகரிப்பாளராகவும் விளங்கியிருக்கிறார்.
தாமே ஓர் எழுத்தாளராகவும் இருந்த திப்புவின் நாற்பத்தைந்து வரையிலான முழுமையற்ற படைப்புகள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டிருந்த போதிலும் க்வாப் நாமா என்கிற பாரசீகப் படைப்பு மட்டுமே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையைத் தாக்கிய கிழக்கிந்தியக் கம்பெனியுடைய படையினருடனான மோதலுக்கிடையில் தான் திப்பு சுல்தான் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார்.
தமிழில்: நெய்வேலி மு.சுப்ரமணி
திப்பு சுல்தான்(எனது கனவுகள்) - Product Reviews
No reviews available

