துணிகள் சாயமிடுதல் பேசுது: 1620 – 1830
துணிகள் சாயமிடுதல் பேசுது: 1620 – 1830
இந்த நூல் காலனியக் காலத்தில் சதுரங்கப்பட்டினத்தில் திரைத்துணி உருவாக்கப்பட்டது பற்றி ஹென்டிரிக் அதிரியன் பான் ரீது நெதர்லாந்துக்கு அனுப்பிய அறிக்கை (1688) மற்றும் புதுச்சேரியில் புயல்யு பருத்தித் துணியில் ஒவியம் வரையும் தொழில்நுட்பத்தை பிரான்சுக்கு மாதிரித் துணித்துண்டுகளுடன் அனுப்பியது (1734) பற்றி ஆய்வு செய்கிறது. புதுச்சேரியில் கஸ்தோன் லோரான் கோர்து துணியில் ஓவியம் வரைதல் பற்றி வழங்கிய அறிக்கை (1742). பியர் போவர் நினைவுக்குறிப்பு (1746), மற்றும் கயர்பூர். ழான் பப்திஸ்தே துசாசோல். ஆகியோர் உள்ளூர் மக்கள் சாயமிடத் தேர்வு செய்யும் நீரைப் பற்றி ஆய்வு செய்ததையும் (1747) விளக்குகிறது. புதுச்சேரியில் லூயி பராதி பருத்தித் துணிக்குச் சிவப்புச் சாயமேற்றும் மூன்று முறைகள் பற்றி கூறும் தொழில்நுட்பம் (1746). மதராசில் இருந்த பெஞ்சமின் ஹெயின் கூறும் சிவப்புச் சாயமேற்றும் இரு முறைகள் பற்றி (1794-1798) விவரிக்கிறது. ஆம்பூரில் குளோது மர்தேன் அவுரி நீலச்சாயத்தை உற்பத்தி செய்ததைக் கண்டது (1791), புதுச்சேரியில் தாவீது கொசிஞ்சி கண்டது (1792), தாமஸ் பாரி, கடலூரில் இச்சாயத்தை கொதித்தல், அழுத்தல், உலர்த்தல், வடித்தல் ஆகிய செயல்முறைகள் மூலம் பதப்படுத்தியது பற்றி கூறுவதைக் கையாள்கிறது. புதுச்சேரியில் வேதியியலாளர் கோன்பிரேவில் சாயமிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயலாக்கத்தையும் (1828-1830), செய்முறைஆய்வு, பிரான்சிற்கு தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம் வழங்கியதையும் சாயமூலப்பொருள்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது பற்றியும் சுவையாக இந்நூல் அலசி ஆராய்கிறது. முன் அட்டைப்படம்: சோழமண்டலக் கடற்கரையில் இயற்கைச் சாயத்தால் 1730ல் உருவாக்கப்பட்ட சின்ட்ஸ் பருத்தித் துணி. எண். 858.141.1 (முல்கவுஸ் துணி அருங்காட்சியகம், பிரான்சு)
துணிகள் சாயமிடுதல் பேசுது: 1620 – 1830 - Product Reviews
No reviews available

