திருநீறு (ஆன்மீகமும் மருத்துவமும்)
Author: டாக்டர். ஆர். நிரஞ்சனாதேவி நிர்வ்வீ
Category: ஆய்வுக் கட்டுரை
Available - Shipped in 5-6 business days
திருநீறு (ஆன்மீகமும் மருத்துவமும்)
திருநீறு என்ற ஒன்றில் ஆன்மீகம் தாண்டிய உடல்நல மனநல நம்பிக்கை சார்ந்த மருத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளல் அவசியம். உண்மையில் முறையாக உற்பத்தி செய்யப்பட்ட பக்குவப்படுத்தப்பட்ட மந்திரம் ஏற்றப்பட்ட திருநீரில் மருத்துவ குணங்கள் இருக்கிறது. முடியவே முடியாது என்ற ஒரு நிலை வரும் பட்சத்தில் நம்பிக்கையுடன் திருநீற்றை அந்தப் பெரும் பிரபஞ்ச சக்த்தியை மனத்தில் நினைத்து பூசிக்கொண்டும் வாயில் சிறிது போட்டுக் கொண்டும் இருக்கும் பொழுது, நல்ல தெளிவு விடிவு கண்டிப்பாகக் கிடைக்கும். புனிதச் சின்னமாக அடையாளமாக போற்றப்படுகிற திருநீறு ஆன்மீக பலத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கிய நலத்துக்கும் உகந்தது என்கிறது நவீன அறிவியல். அளவற்ற மகிமைகள் கொண்ட திருநீற்றின் மகிமைகள் வகைகள், பயன்படுத்தும் முறைகள், பூச வேண்டிய இடங்கள் மற்றும் கால நேரங்கள் பற்றி அறிந்து கொள்ள இந்த நூல் வழிகாட்டுகிறது. தமிழர்களின் முக்கிய அடையாளமான இந்த திருநீறு பூசும் பழக்கத்தைக் கைவிடாதபடி எப்பொழுதும் இல்லை என்றாலும் எப்பொழுதாவதாவது நம்பிக்கையுடன் பூசிக்கொண்டு நலம் பெற வேண்டும் என்ற தமிழர்களின் அடையாளம் தொடரச் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்கு இந்த நூல் பலம் சேர்க்கும். திருநீறு ஆன்மீகமும் மருத்துவமும் என்ற இந்த நூல் பல்வேறு வரலாற்று தொடர்பான உண்மைத் தரவுகளின் ஒரு தொகுப்பு ஆகும்.
- விகடன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கரிகால் சோழன் எழுதிய ஆசிரியர் டாக்டர் ஆர். நிரஞ்சனாதேவி நிர்வ்வீயின் மற்றொரு படைப்பு.
திருநீறு (ஆன்மீகமும் மருத்துவமும்) - Product Reviews
No reviews available

