திருமலை நாயக்கர் சரித்திரம்
திருமலை நாயக்கர் சரித்திரம்
திருலை நாயக்கர் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களில் ஒருவர் என்பதை யாவரும் அறிவர். அவருடைய உருவச்சிலையையும், அவராற் கட்டப்பெற்ற சில கட்டிடங்களையும் பார்த்தவர்கள் பலர் இருப்பார்கள். ஆனாலும் அவரைப்பற்றிய சரித்திரத்தைத் தெள்ளிதின் அறிந்தவர் மிகச்சிலரேயாவர். ஏனெனில் அவருடைய சரித்திரம் முறையாகத் தமிழில் இல்லாமலிருப்பதே அதற்குக் காரணம்.
சரித்திரத்தைத் தமிழில் அப்பெருந்தகையாருடைய எழுதவேண்டும்' மென்று யாம் பல நாளாக நினைத்திருந்தும், அதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்காமையால் இதுவரை காலந்தாழ்த்தி வந்தோம். மேலும் தக்க ஆதாரமில்லாது 'ஏதோ ஒருவாறு எழுதி முடித்தோம்' என்றெழுதுவது எமக்கு அத்துணை இஷ்டமில்லை யாகையால், கூடிய அளவில் பழைய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தோம். பல
அது தருணம் எமது நண்பரொருவர்"மதுரைச் சேசுசபை சாமியார்கள் இடத்தில் வேண்டிய ஆதாரங்களிருக்கின்றன" என்று தெரிவித்தார். அதன்படி எங்கள் கலாசாலைச் சரித்திர போதகாசிரிய சாமியாரவர்களை யான் கேட்டபோழ்து. அவர் மிகுந்த அன்புடனும், ஊக்கத்துடனும் ''நாயக்கர் சரித்திரமெழுதுவதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன.
திருமலை நாயக்கர் சரித்திரம் - Product Reviews
No reviews available

