தீ (எஸ்.பொன்னுத்துரை)

0 reviews  

Author: எஸ்.பொன்னுத்துரை

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  175.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தீ (எஸ்.பொன்னுத்துரை)

தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? என்பதே, ‘தீ’யின் அடிப்படையான உசாவல். பல தடவைகளாக . . . வெவ்வேறான இடங்களில் . . . வித்தியாசமான பருவங்களில் . . . தீக்குள் விரலை வைக்கும் எத்தனங்களும், அவற்றுள் சிலவற்றில் ஏற்படும் தோல்வியும், சிலவற்றில் வெற்றி கொள்வதாக ஏற்படும் வீண் மயக்கமும், பின்னர் அவற்றின்பாலான விளைவுகள் தரும் வெம்மையிலும் பொசுங்கிப்போய்த் தறி கெட்டோடும் ஒரு மனிதனது கதையின் சில அத்தியாயங்களையே ‘தீ’ தொட்டுச் செல்கிறது. “தூரத்துப் பார்வைக்கு ஒளியாய், வெளிச்சமாய், அருகி வர அருகி வர வெப்பமாய், வெப்பம் அதிகரித்துச் சூடாகப் பரவும் நியதி“ என முந்தைய பதிப்பின் முன்னுரையில் இதை அழகாக விட்டல்ராவ் விபரிக்கின்றார். வாசகன் இவ்வாசகங்களுடன் ‘தீயாக எரிக்கும் நியதி’ எனவும் சேர்த்து வாசித்துக்கொள்கிறான். முன்னுரையில் றஞ்சகுமார் எஸ். பொன்னுத்துரை யாழ்ப்பாணம் நல்லூரில் பண்டாரக்குளம் பகுதியில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆங்கில ஆசிரியை ஈஸ்பரம் அவர்களைத் தனது 24ஆம் வயதில் திருமணம் செய்துகொண்டார். 1981ஆம் ஆண்டு நைஜீரியாவில் ஆங்கில மொழியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1990இல் ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆஸ்திரேலியாவிலும் சென்னையிலுமாக வாழ்ந்தார். சென்னையில் மித்ர பதிப்பகத்தை ஆரம்பித்து நிர்வகித்து வந்தார். எஸ். பொவிற்கு மேகலா அநுர, மித்ர, புத்ர, இந்ர எனும் பிள்ளைகள். மித்ர ஈழப்போரில் பங்குபெற்று மாவீரரானார். புத்ர ஒரு விபத்தில் மரணமடைந்தார். எஸ்.பொ. ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார்.

தீ (எஸ்.பொன்னுத்துரை) - Product Reviews


No reviews available