ஶ்ரீலஶ்ரீ சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்
ஶ்ரீலஶ்ரீ சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்
தமிழகப் பட்டியலின வரலாற்றின் முக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத் தகுந்தவர் சுவாமி சகஜானந்தர். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல. அரசியல் தலைவர், கல்வியாளர், பத்திரிகையாளர், தமிழறிஞர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். சமயப் பணியில் இருந்துகொண்டே சமூகப் பணியிலும் ஈடுபட முடியும் என்பதற்கு முன்னுதாரணமானவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை முன்னேற்ற அரசியலில் நுழைந்த சகஜானந்தர், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். ஒடுக்கப்பட்டோர் கல்வி, பொருளாதார முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்காக அவையில் குரல் கொடுத்தார்.
1927ம் ஆண்டு முதல் 1959ம் ஆண்டு வரை மெட்ராஸ் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில், பட்டியலின மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவர் ஆற்றிய உரைகள் இந்நூலில் கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த நூல் ஒரு முக்கியமான ஆவணம்.
ஶ்ரீலஶ்ரீ சகஜானந்தர் சட்டமன்ற உரைகள் - Product Reviews
No reviews available

