ஶ்ரீ ராமனுஜர்(கோவில் முதல் குடிசை வரை)
ஶ்ரீ ராமனுஜர்(கோவில் முதல் குடிசை வரை)
ராமானுஜர் ஓர் ஆன்மிக ஆசாரியராக மட்டுமல்லாமல், மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அதனால், அண்ணல், பெரியார், சீர்திருத்தம் கண்ட செம்மல், புரட்சி செய்த தலைவர், தமிழ்த் தலைவன் போன்ற பட்டங்கள் அனைத்தும் ஸ்ரீ ராமானுஜருக்கே முழுமையாகப் பொருந்தும் என்று இந்நூல் அழுத்தமாகக் கூறுகிறது.
திவ்ய ஞானத்தில் சிறந்து விளங்கிய ஆசாரியன் ராமானுஜருக்கு மானசிக குரு, வைசிய குலத்தில் பிறந்த திருக்கச்சி நம்பி.
மல்லர் சமுதாயத்தைச் சேர்ந்த உறங்கா வில்லி தாசரை ராமானுஜர் தன் மடத்தில் சேர்த்துக் கொண்டு அவருக்குக் கருவூலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். ராமானுஜர் காவேரியில் குளித்து மடம் திரும்புகையில் உறங்கா வில்லி தாசரின் தோளில் கையிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பல்வேறு வைணவ ஆசாரியர்கள் சாதிக் கட்டுப்பாடுகளைக் கடந்து சமுதாயப் பணியில் ஈடுபட்ட அரிய தகவல்களும் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நூலை வெறும் கதையாக எழுதாமல், ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களின் வரலாற்று நிகழ்வுகள், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தப் பாடல்கள், பின்பழகாரம் பெருமாள் ஜீயர் எழுதிய குருபரம்பரா ஆறாயிரப்படி, வார்த்தாமாலை, பிள்ளை லோகாசாரியார் எழுதிய ஸ்ரீ வசனபூஷணம், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் எழுதிய ஆசாரியஹ்ருதம், மணவாள மாமுனிகள் எழுதிய உபதேச ரத்தின மாலை, பிள்ளைலோகம் ஜீயர் எழுதிய ராமானுஜார்ய திவ்ய சரிதை, திருவரங்கம் கோயிலொழுகு, வடிவழகிய நம்பி தாசர் எழுதிய ஸ்ரீ ராமானுஜ வைபவம் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் மகர சடகோபன்.
ஶ்ரீ ராமனுஜர்(கோவில் முதல் குடிசை வரை) - Product Reviews
No reviews available

