சொற்பொழிவுகள்
சொற்பொழிவுகள்
’இப்படித்தான் இருக்க வேண்டும்’
என்று கோடிட்டால்,
’ஏன்?அப்படி இருக்கக்கூடாதா?" என்ற கேள்வி எழுவது இயல்பு.
ஒரு பத்தின்மேல் எதிர்மறையாக
இரு துருவப் புள்ளிகளே உண்டென்றும்,
அதில் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கும் நமக்கு
அண்டம் தெரிவதில்லை;அகண்டம் விரிவதில்லை.
கதை ஓவியம் புத்தகம் தர்க்கம்...
இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதிகளும்... மேல் குறிப்பிட்டது போன்ற துருவப் புள்ளிகளே.
இவை இரண்டிற்கும் நடுவில் இருப்பது
ஒரு மெல்லிய கோடல்ல. உயிர் ஜனிக்கும் உலகம். இவற்றுக்கு வெளியே இருப்பது தேவையற்ற பரப்பல்ல. அதிசய மர்மங்கள் அடங்கிய பிரபஞ்சம்.
"சொற்பொழிவுகள்"
இப்புத்தகம், இதில் தோன்றும் கதை மற்றும் ஓவியங்களுக்கு; துருவப் புள்ளிகளின் மேல் எவ்வித விசுவாசமும் கிடையாது.
தெளிவான உள்ளடைவுடன் இலக்கிய எழுத்துகளையும் ஓவிய வடிவங்களையும் கலைத்துப் போட்டு,
மீண்டும் அடுக்கத் தூண்டும் கலைப் பயிற்சிகளின்மேல் கொண்ட மோகம் மட்டுமே.
சொற்பொழிவுகள் - Product Reviews
No reviews available

