சோளகர் : வாழ்வும் பண்பாடும்

0 reviews  

Author: பகத்சிங்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சோளகர் : வாழ்வும் பண்பாடும்

 

பகத்சிங்

தமிழகத்தின் மிக பழமையான பழங்குடிகளில் “சோளகர்” குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை.
 

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கெத்தேசால் கிராமத்தில் வாழ்த்து வரும் "சோளகர்" என்ற பழங்குடி பிரிவு பற்றி அ.பகத்சிங் அவர்கள் மேற்கொண்ட கள ஆய்வு இச்சிறு நூலாக வெளிவருகிறது. பழங் குடி சமூகம் இனச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகள், மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றை அக்கறையுடன் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் மிகப் பழமையான பழங் குடிகளில் ஒன்றான 'சோளகர்' குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில்கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை. இதற்கு 1980களில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை இம்மக்கள் வாழும் வனப்பகுதிகள் முழுவதும் பதற்றத்திற்குரிய ஒன்றாக இருந்ததுதான் காரணமாகும்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் “சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்". அதையொட்டி வெளியேற்றப்படுவோமோ என்று அம்மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் என சமகால பிரச்சினைகள் உட்பட அனைத்தையும் ஆசிரியர் பதிவு செய் துள்ளார். இத்தகைய நிலையில் பழங்குடி சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் இதர சமூகத்தின்' கவனத்தை பெறுவது மட்டுமல்ல. ஆதரவையும் பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்,

 

சோளகர் : வாழ்வும் பண்பாடும் - Product Reviews


No reviews available