சிவநாதபுரம்
சிவநாதபுரம்
இந்தியாவின் குறிப்பாகத் தமிழ்நாட்டின் பல முக்கியக் கோவில்களின் அரிய சிலைகள் திருடப்பட்டு இன்றுவரை வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிலைகளை மீளக் கொண்டு வருவதற்கான நீண்ட சட்டப் போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஓர் உன்மையான சிலைக் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து இந்த நாவலை விறுவிறுப்பாகப் படைத்துள்ளார் சிரா.
சுதந்திர இந்தியாவில் சிவநாதபுரத்தில் இருக்கும் சிவகுருநாதர் கோவிலில் இருக்கும் நடராஜர் உள்ளிட்ட சில சிலைகள் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகின்றன. கோவிலில் போலிச் சிலைகள் வைக்கப்படுகின்றன. இது எப்படி மக்களுக்குத் தெரியவருகிறது? யார் யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் யாரெல்லாம் இதற்கு உடந்தை? இதில் வெளிநாட்டவரின் பங்கு என்ன? நடராஜர் சிலை மீட்டெடுக்கப்பட்டு கோவிலில் புனர்நிர்மாணம் செய்யப்படுகிறதா? இப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது ‘சிவநாதபுரம்’ நாவல்.
உண்மை நிகழ்வுகளுடன் கற்பனை கலந்து பரபரப்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், இன்றுவரை தொடரும் சிலைக் கடத்தலைக் களமாகக் கொண்டிருப்பதால், கதை என்பதைத் தாண்டி வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
சிவநாதபுரம் - Product Reviews
No reviews available

