சிவகங்கை போர்க்களமும் தொன்மை நிலமும்
சிவகங்கை போர்க்களமும் தொன்மை நிலமும்
வரலாற்றாசிரியர்களின் கண்களுக்கு சிப்பாய்க் கலகம்தான் முதல் சுதந்திரப் போராகத் தெரியும். அதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே சிவகங்கை மண்ணில் வீறுகொண்டெழுந்த சுதந்திரப் போராட்டம் தெரியாது. பரந்துபட்ட இந்திய சமஸ்தானங்களில் மக்கள் சுதந்திர வேட்கை கொள்ளும் முன்பாக சிவகங்கை மக்கள் தாகம் கொண்டார்கள்; ஆயுதம் தரித்தார்கள். மருது சகோதரர்களுக்கு உற்ற துணையாக இருந்து தங்கள் உயிரை இழந்தவர்கள் குறித்தெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விரிவான பதிவுகள் இல்லை. சிவகங்கையில் வைகை நதிக்கரையிலிருக்கும் கீழடி குறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள். ஆய்வறிக்கையைத் திருத்தித் தரக் கேட்கிறார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலக்கட்டத்தில் சிவகங்கை குறித்து ஓர் ஆவணத்தை உருவாக்கியிருக்கிறார் செங்கதிர். சுதந்திரப் போராட்டவீரர் நெல்லியான், வள்ளல் அழகப்ப செட்டியார், தோழர் நல்லக்கண்ணுவின் குருநாதர் நமச்சிவாயம், கவிஞர் முடியரசன், வென்னியூர் கார்மேகத் தேவர், மக்கள் போராளி தோழர் பூ.சந்திரபோசு, கவிஞர் மீரா குறித்த கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. - வெ.நீலகண்டன்
சிவகங்கை போர்க்களமும் தொன்மை நிலமும் - Product Reviews
No reviews available

