சில்லரை முதலீட்டாளர்கள்

0 reviews  

Author: குகன்

Category: வர்த்தகம்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சில்லரை முதலீட்டாளர்கள்

ஒரே பாட்டில் சூரிய வம்சம் சரத்குமார் போன்றோ, அண்ணாமலை ரஜினிபோல உயர நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இந்தப் புத்தகத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
= பங்குகளிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி என்ற கேள்விக்கான பதிலை விளக்கும் ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. அப்படியிருக்கும்போது இந்தப் புத்தகம் பெரிதாக என்ன மாற்றிவிடப் போகிறது என்று கேட்கலாம். கண்டிப்பாக, இந்தப் புத்தகம் பங்குச் சந்தையைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றும், நீங்கள் வர்த்தகம் செய்யும் முறையை மாற்றும்.
ஒரு சிறு முதலீட்டாளராக உங்களுக்குக் கூடுதல் வருமானத்தையோ, வயதான காலத்தில் வருமானத்தைப் பங்குச் சந்தை கண்டிப்பாகக் கொடுக்கும்.
பங்குச் சந்தையின் பெரிய இழப்புகளைச் சந்திப்பது Retail Investors எனப்படும் சில்லரை முதலீட்டாளர்களே. பெரும் முதலீட்டாளர்கள் இழப்புகளைச் சந்தித்தாலும், வேறு பங்குகள் மூலம் வரும் லாபத்தில் சரி செய்துவிடுவார்கள். ஆனால், ஒரு சில்லரை முதலீட்டாளர்களான நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டால், மீண்டு எழுவது சிரமம். பெரும்பாலும், பங்குச் சந்தையில் நஷ்டமடைவது இந்தச் சில்லரை முதலீட்டாளர்கள்தான்.
இந்தப் புத்தகம் அதிக லாபம் சம்பாதிக்க உதவாது. ஆனால், நியாயமான லாபத்தைச் சம்பாதிக்க உதவும்.
உங்கள் முதலீட்டின் இழப்பைக் குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ உதவும்.
உங்களின் வளமான வாழ்க்கைக்கு 'கஞ்சன்' என்று பெயரெடுக்காமல், இன்னொரு வருமானத்தைப் பங்குச் சந்தையில் கிடைக்கும் என்று நம்புபவர்களுக்கு உதவும்.
நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் பங்குச் சந்தை முதலீடு செய்வது, அந்தப் பணத்தைப் பாதுகாப்பதற்காகச் சிறு முதலீட்டாளர்களாக உயர வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

சில்லரை முதலீட்டாளர்கள் - Product Reviews


No reviews available