சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும்
சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும்
வல்லுநர் வரிசையில் இடம்பெறும் பெருமைக்குரிய இசைப்பேரறிஞர் அரிமளம் பத்மநாபனின் ஆய்வுக் கருவூலமாக அமைகிறது இந்நூல். கல்வியாளர், இசைக்கலைஞர், இசை நாடக ஆய்வாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் என மாண்புமிகு தகுதிகள் பலவும் பெற்ற பெருந்தகை அரிமளம். சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தியது மட்டுமன்றி அவருடைய நாடகச் செல்வங்களைத் தேடிப் பதிப்பித்த மாமனிதர். மியூசிக் அகாடமியால் விருது தந்து கௌரவிக்கப்பட்டவர்.
புதிய கோணத்தில் சிலப்பதிகாரத்தைக் காண முனையும் அரிய முயற்சியின் விளைவாக ‘சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும்’ நூல் அமைகின்றது.
இந்நூலின் உயிர்ப் பகுதியாகத் திகழ்வது எட்டாவது அத்தியாயமான ‘உருவாக யாழும் அருவாக ஊழும்’ ஆகும். கானல் வரி முதல் யாழ் என்ற உருவமுள்ள பாத்திரத்தோடு நட்புக் கொள்கிறது அருவமான ஊழ். அந்த ஊழ் யாழைத் தடுமாறச் செய்யும் கோலங்களை அரிமளம் இசைப் புலமையோடு இணைந்து எடுத்து மொழிகிறார். அதுதான் இந்நூலின் சாரம். இதை உணரவும் உணர்ந்து அனுபவிக்கவும் எட்டாம் அத்தியாயத்தைக் கூர்ந்து வாசிக்கும்படி அறிஞர்களையும் வாசகர்களையும் வேண்டுகின்றேன். குறிப்பும் உட்குறிப்புமாகக் காப்பியத் திறனாய்வின் சிகரங்களை ஆசிரியர் தொடுகிறார். இந்நூலாசிரியர் கருத்து என்று சிறப்பிக்கப்படும் பகுதிகளை நுகர்ந்து மகிழ வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னிசைச் சிலம்பு ஆய்வுப் பேரறிஞர் கரத்தில் ஆற்றல் மிக்க ஆபரணமாக மாறுகிறது. கண்ணகி கரங்களில் மாணிக்கங்களாகத் தெறித்தது சிலம்பு. அரிமளம் கரங்களில் கருத்து வைரங்களாய் மின்னிச் சிரிக்கிறது.
- கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும் - Product Reviews
No reviews available

